வாட்ஸ் ஆப் செயலியின் புதிய பதிப்பில் மற்றுமொரு புதிய அம்சம் அறிமுகம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
67Shares
67Shares
lankasrimarket.com

வாட்ஸ் ஆப் செயலியானது அன்ரோயிட், iOS மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களைக் கொண்ட மொபைல் சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் புதிய பதிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் அன்ரோயிட் சாதனங்களுக்காக மாத்திரமே இது வெளியிடப்பட்டுள்ளது.

இப் பதிப்பில் வாட்ஸ் ஆப் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் தனது தொலைபேசி இலக்கத்தினை மாற்றும்போது அது தொடர்பாக தெரியப்படுத்தக்கூடிய வசதி உள்ளடக்கப்பட்டுள்ளது.

இப் புதிய பதிப்பானது 2.18.97 என அழைக்கப்படுகின்றது.

iOS மற்றும் விண்டோஸ் சாதனங்களுக்கான இப் புதிய பதிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.

இதேவேளை புதிய பதிப்பில் மேலும் சில புதிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்