புகைப்படங்கள், வீடியோக்கள் தொடர்பில் பேஸ்புக்கின் திடீர் நடவடிக்கை

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
20Shares
20Shares
lankasrimarket.com

சுமார் 50 மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் கண்காணிக்கப்பட்டதனை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொய்யான தகவல்கள் மற்றும் கட்டுக்கதைகள் என்பன தொடர்பில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

இதன் ஆரம்பகட்டமாக பேஸ்புக் தளத்தில் பதிவேற்றப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் என்பவற்றின் உண்மைத் தன்மை தொடர்பான சோதனைகளை ஆரம்பித்துள்ளது.

இதனை Facebook Inc கடந்த வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

போலியான தகவல்கள் மற்றும் வன்முறைகளைத் தூண்டும் கட்டுக்கதைகள் என்பனவற்றுக்கு வலுச்சேர்க்கும் வகையில் சம்மந்தமில்லாத புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

இதன் காரணமாகவும் சமூகவலைத்தளங்கள் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றது.

இப் பிரச்சினையை தவிர்ப்பதற்காகவே இந்த அதிரடி நடிவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்