கொசுவை ஒழிக்க ராடார் கண்டுபிடித்து தொழில்நுட்பத்தில் அசத்தும் சீனா

Report Print Athavan in ஏனைய தொழிநுட்பம்
41Shares
41Shares
lankasrimarket.com

அண்டை நாடான சீனா கொசுவைக் கண்டுபிடித்து ஒழிக்க ஏவுகணை பாதுகாப்பு அமைப்பில் பயன்படுத்தப்படும் முக்கிய தொழில்நுட்ப சாதனத்தைக் கண்டு பிடித்துள்ளது.

வெகு சிறிய உயிரினமான கொசுக்களால் மனித உயிர்கள் பல நோய்களைப் பெற்று வருகின்றன. இதன் மூலம் ஏற்படும் உயிரிழப்புகள் ஆண்டு தோறும் 10 லட்சம் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

கொசுவை ஒழிப்பதில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமாய் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது . நம் நாட்டில் கொசு உற்பத்தியாகும் இடங்களில் மருந்து தெளிப்பது, கொசு விரட்டிகள் உபயோகப்படுத்துவது போன்ற பல முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் சீனாவோ ஒரு அடி மேலே போய் கொசுவின் இருப்பிடம் அறிந்து அழிக்கும் வகையில் ராடார் சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. 2கிமீ சுற்று வட்டத்தில் உள்ள கொசுக்களை இந்த ராடாரின் உதவியோடு கண்டு அழிக்க முடியும்.

ராடரில் இருந்து வெளியேறும் மின்காந்த அலைகள் கொசுவில் பட்டு திரும்பும்போது கொசு பற்றிய தகவல்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.

இதன் மூலம் அந்தக் கொசு சாப்பிட்டு விட்டதா அல்லது பசியோடிருக்கின்றதா என்பது கூடத் தெரிந்து விடுமாம். அதன் பின் இதன் அளவு மற்றும் இதர விஷயங்களைத் தெரிந்து கொண்டபின் அதற்கு ஏற்றார்போல ஒழிப்பு நடவடிக்கையில் நாம் ஈடுபட முடியும் என்கிறது இந்தக் கண்டுபிடிப்பு.

மற்ற நாடுகளில் பெரிய பூச்சியினங்கள் பறவைகள் போன்றவைகளின் நகர்வுகளை மனிதர்கள் கண்காணிக்கும் வகையில் ராடார் பொருத்தப் பட்டுள்ளது . ஆனாலும் உலகிலேயே கொசுவைக் கண்காணிக்கும் விதமாய் ராணுவத் தொழில் நுட்பத்தை சீனா கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்