வைரஸ் தாக்கத்திலிருந்து கணிணியை பாதுகாக்க மைக்ரோசொப்ட்டின் புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
66Shares
66Shares
lankasrimarket.com

சில மாதங்களுக்கு முன்னர் ரன்ஸ்சம்வேர் எனும் வைரஸ் தாக்கத்தினால் உலகின் பல நாடுகளிலும் உள்ள இணைய வலையமைப்பு ஸ்தம்பித்திருந்தது.

தொடர்ச்சியான போராட்டத்தின் பின்னர் இந்த வைரஸிலிருந்து விடுதலை கிடைக்கப்பெற்றிருந்தது.

எனினும் இத் தாக்குதல் மீண்டும் இடம்பெறலாம் என மைக்ரோசொப்ட் நிறுவனம் கருதுகின்றது.

இதனால் ஒன்ட்ரைவ் க்ளவுட் ஸ்டோரேஜில் உள்ள கோப்புக்களை பாதுகாக்க புதிய வசதி ஒன்றினை இந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி ரன்ஸ்சம்வேர் தாக்குதலுக்கு உள்ளான கோப்புக்களை மீளப்பெற்றுக்கொள்ள (Recover) முடியும்.

அதேபோன்று தவறுதலாக அழிக்கப்பட்ட கோப்புக்களையும் இவ் வசதியினைப் பயன்படுத்தி 30 நாட்களுக்குள் மீளப்பெற்றுக்கொள்ள முடியும்.

அதேபோன்று Outlook.com ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் மின்னஞ்சல்களையும் என்கிரிப்ட் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்