உங்களிடமிருந்து என்ன தகவல்களை ஆப்பிள் சேகரிக்கிறது? இப்போது நீங்கள் தெரிந்து கொள்ளலாம்

Report Print Balamanuvelan in ஏனைய தொழிநுட்பம்

ஆப்பிள் உங்களிடம் இருந்து என்னென்ன தகவல்களை சேகரிக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்கு வசதியாக ஒரு புதிய பிரைவசி போர்ட்டல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்மூலம் உங்களிடமிருந்து ஆப்பிள் சேகரித்துள்ள தகவல்களின் ஒரு நகலை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம், தகவல்களில் தவறு இருந்தால் திருத்திக் கொள்ளலாம், உங்கள் கணக்கை டீ ஆக்டிவேட் செய்யலாம் அத்துடன் உங்கள் கணக்கை நிரந்தரமாக நீக்கவும் செய்யலாம்.

இந்த தகவல்களில் உங்கள் ஆப்பிள் ஐ.டி குறித்த தகவல்கள், App Store activity, AppleCare history மற்றும் படங்கள், ஆவணங்கள், நினைவூட்டல்கள், app usage history, கேலண்டர்கள், Game Center statisticsபோன்ற iCloudஇல் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களும் அடங்கும்.

ஆனால் இந்த புதிய வசதி தற்போது ஐரோப்பிய ஒன்றியம், ஐஸ்லாந்து, நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பதிவு செய்த பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும். சில மாதங்களில் இந்த வசதி உலகம் முழுவதிலும் கிடைக்கும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.

மே மாதம் 25 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வர இருக்கும் புதிய General Data Protection Regulation (GDPR) விதிகளுக்கு உட்படும் வகையில் இந்த பிரைவசி போர்ட்டல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி, நிறுவனங்கள் பயனர்களிடமிருந்து சேகரிக்கப்படும் தகவல்கள் எவ்விதம் பகிரப்படுகின்றன, நிர்வகிக்கப்படுகின்றன என்பது தொடர்பான கடும் விதிகளுக்கு உட்படுத்தப்படும்.

Facebook, Instagram, Google மற்றும் Twitter போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் புதிய data toolகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரைவசி போர்ட்டலை அணுக நிறுவனத்தின் பிரைவசி பக்கத்திற்கு சென்று உங்கள் ஆப்பிள் கணக்கில் லாகின் செய்யவேண்டும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers