வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு ஓர் பகீர் தகவல்

Report Print Raju Raju in ஏனைய தொழிநுட்பம்
232Shares
232Shares
lankasrimarket.com

வாட்ஸ்அப் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் குறுந் தகவல்களை ஹேக் செய்ய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை தவிர்க்கும் நோக்கில் குறுந்தகவல்களை ஃபார்வேர்டு செய்யும் போது ஃபார்வேர்டெட் (forwarded) லேபெல் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும் வாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பை மேம்படுத்த அந்நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. அதன்படி செக்பாயின்ட் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் மெசேஜ்களை ஹேக்கர்கள் படிப்பதுடன் அவற்றை மாற்றவும் முடியும் என தெரியவந்துள்ளது.

அதாவது புதிய பிழையானது செயலியில் அனுப்பப்படும் குறுந்தகவல்களை இடைமறித்து, அவற்றை மாற்றியமைக்க வழி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் க்ரூப் சாட் உள்ளிட்டவற்றுக்கும் இது பொருந்தும்.

வாட்ஸ்அப் செயலியில் கண்டறியப்பட்டுள்ள புதிய பிழை, மூன்று வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
  • ஹேக்கர்கள் பயனர் அனுப்பும் பதிலை மாற்ற முடியும்.
  • க்ரூப்-இல் இருக்கும் ஒருவர் அனுப்பியதாக தகவல் ஒன்றை அனுப்ப முடியும். இது க்ரூப்பில் இருக்கும் மற்றவர்களுக்கு குறிப்பிட்ட பயனர் அனுப்பியதாகவே தெரியும்.
  • தனிப்பட்ட உரையாடல் ஒன்றை க்ரூப் சாட்டில் காண்பிக்க செய்ய முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்