பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

அண்மையில் இடம்பெற்ற பாரிய பேஸ்புக் தகவல் திருட்டு தொடர்பில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனமும் இது தொடர்பாக அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது.

எவ்வாறெனினும் இத் தகவல் திருட்டின்போது பயனர்களின் கடவுச் சொற்கள் திருடப்படவில்லை எனவும் பயனர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, செல்பேசி இலக்கம், முகவரி மற்றும் பின்பற்றும் மதம் போன்ற தகவல்களே திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியிருக்கையில் ஒவ்வொரு பேஸ்புக் பயனர்களும் தமது தகவல்கள் திருடப்பட்டுள்ளதா? என்பதையும், திருடப்பட்டிருப்பின் எவ்வாறான தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்பதனையும் அறிந்துகொள்ள முடியும்.

இதற்கு https://www.facebook.com/help/securitynotice எனும் முகவரிக்கு சென்று அப் பக்கத்தின் கீழ் பகுதியில் பார்வையிட வேண்டும்.

அதாவது Is my Facebook account impacted by this security issue? எனும் வசனத்தின் கீழ் பார்வையிட வேண்டும்.

தகவல் திருட்டு அம்சங்கள் அடங்கிய மாதிரி புகைப்படம் ஒன்று கீழே தரப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்