மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் மரணம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கணினி உலகின் ஜாம்பவானாக திகழும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தை பில்கேட்சுடன் இணைந்து உருவாக்கிய போல் அலன் மரணமடைந்துள்ளார்.

கடந்த இரு வாரங்களாக நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த அலன் தனது 64 வது வயதில் நேற்று முன்தினம் காலமாகியுள்ளார்.

நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் குறித்த நோய் அவரை கடுமையாக தாக்கியிருந்தது.

இவரது மரணம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பில்கேட்ஸ் “தனது அன்பான, நீண்டகால நண்பரின் பிரிவால் தனது இதயம் சுக்குநூறாக உடைந்துள்ளதாகவும், இவர் இல்லாவிட்டிருந்தால் தற்போது தனிநபர் கணினி புரட்சி ஏற்பட்டிருக்காது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்