ஐபோன் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்: சீனா கொடுத்த மாற்று யோசனை

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் ஐபோன் தொடர்பில் சர்ச்சையான கருத்து ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதாவது உளவாளிகளால் தனது ஐபோன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக குற்றம் சுமத்தியிருந்தார்.

இதற்கு ஐபோனிற்கு பதிலாக ஹுவாவீ கைப்பேசிகளை பயன்படுத்துமாறு ட்ரம்ப்பிற்கு சீனா யோசனை தெரிவித்துள்ளது.

இந்த மாற்று கருத்தினை சீனாவின் வெளிநாட்டு அமைச்சின் துணை இயக்குனர் Hua Chunying தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் கடந்த பெப்ரவரி மாதமளவில் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ஹுவாவி கைப்பேசிகள் பாதுகாப்பு அற்றன என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த எச்சரிக்கையை CIA, FBI மற்றும் NSA ஆகிய புலனாய்பு அமைப்புக்களே வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers