திட்டமிட்டு கைப்பேசிகளின் வேகத்தை குறைக்கும் ஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு அபராதம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

தமது புதிய கைப்பேசிகளை விற்பனை செய்யும் நோக்கில் ஏற்கணவே அறிமுகம் செய்த கைப்பேசிகளின் வேகங்களை குறைக்கும் முயற்சியில் பல்வேறு கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன.

இதற்காக கைப்பேசிகளுக்கான அப்டேட்களில் அவற்றின் வேகத்தினை குறைக்கக்கூடிய செய்நிரல்கள் உள்ளடக்கப்படுகின்றன.

இதனை கண்டுபிடித்த இத்தாலிய நிறுவனம் ஒன்று ஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு எதிராக அபராதம் விதித்துள்ளது.

இந்த அபராத தொகையானது 5.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

Italian Competition Authority அல்லது AGCM என அழைக்கப்படும் அமைப்பே இந்த அபராதத்தை விதித்துள்ளது.

இதேவேளை கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் iOS சாதனங்களில் பயன்படுத்தப்படும் அப்பிளிக்கேஷன்களின் செயற்பாட்டு வேகம் குறைவடைவது தொடர்பில் பகிரங்கமாக குற்றச்சட்டு ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers