பயனர்களுக்காக அற்புதமான வசதியை தரும் Firefox

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கூகுள் குரோம் உலாவிக்கு அடுத்ததாக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் உலாவியாக Firefox விளங்குகின்றது.

இவ் உலாவியில் தற்போது புதிய வசதி ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒன்லைன் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்யும் பயனர்கள் அதிக பயனடைய முடியும்.

அதாவது தரப்பட்டுள்ள புதிய நீட்சியானது கொள்வனவு செய்ய வேண்டிய பொருட்களின் விலை மாற்றங்களை காண்பிக்கும்.

எனவே விலை குறைவடையும்போது குறித்த பொருளை கொள்வனவு செய்ய முடியும்.

தற்போது Amazon, Best Buy, Home Depot, eBay, மற்றும் Walmart ஆகிய நிறுவனங்களில் உள்ள பொருட்களின் விலைகளை காண்பிக்கக்கூடியதாக இருக்கின்றது.

எனினும் எதிர்காலத்தில் மேலும் பல நிறுவனங்களின் விலைப்பட்டியல் இதனுள் உள்ளடக்கப்படலாம் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers