கூகுள் அறிமுகம் செய்யும் Project Fi பற்றி தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கூகுள் நிறுவனம் வயர்லெஸ் தொலைபேசி சேவை ஒன்றினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இதற்கு Project Fi என பெயரிடப்பட்டுள்ளது.

இச் சேவையினை 20 டொலர்கள் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.

இதன்போது எல்லையற்ற அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்தி பரிமாற்றம் என்பவற்றினைப் பெற முடியும்.

எனினும் இணையப் பாவனைக்கு தேவையான டேட்டாவினைப் பெற்றுக்கொள்வதற்கு 10 டொலர்கள் மேலதிகமாக செலுத்த வேண்டும்.

இவ்வாறு 10 டொலர்கள் செலுத்தின் 6GB வரை டேட்டாவினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அமெரிக்காவில் Sprint, T-Mobile என்பவற்றினூடாகவும், ஏனைய அனுமதிக்கப்பட்ட வலையமைப்புக்கள் ஊடாகவும் இணைந்து இச் சேவையினைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

தவிர மேலும் 170 இற்கும் அதிகமான நாடுகளில் இத் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஏனைய நாடுகளில் இருந்து இவ் வசதியினைப் பயன்படுத்தும்போது VPN (Virtual Private Network) ஊடாக தானாக இணையக்கூடியதாக இருக்கின்றமை விசேட அம்சமாகும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers