மைக்ரோசொப்ட்டின் அதிரடி அறிவிப்பு: மகிழ்ச்சியிலும் ஓர் அதிர்ச்சி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
36Shares

ஹேம் பிரியர்களுக்காக மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட சாதனம் Xbox ஆகும்.

இச் சாதனத்தில் இணைய இணைப்பின் ஊடாகவும், இறுவட்டுக்கள் ஊடாகவும் பல்வேறு ஹேம்களை விளையாட முடியும்.

எனினும் இச் சாதனத்தின் விலை சற்று அதிகமாகும்.

இப்படியிருக்கையில் மைக்ரோசொப்ட் நிறுவனம் குறைந்த விலையில் Xbox சாதனத்தினை உருவாக்கி அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இப் புதிய சாதனத்தின் விலையானது 200 டொலர்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இச் சாதனத்தில் இறுவட்டு பயன்படுத்வதற்கான செலுத்தி (Disc Drive) தரப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இச் சாதனம் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

எவ்வாறெனினும் இறுவட்டு பயன்படுத்த முடியாது என்பது ஹேம் பிரியர்களுக்கு சற்று அதிர்ச்சியான செய்தியாகவே பார்க்கப்படுகின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்