தற்போது மருத்துவத்துறையில் காணப்படும் ஸ்கானர்கள் மனித உடலை வெளியில் இருந்தவாறே ஸ்கான் செய்யக்கூடியவையாக இருக்கின்றன.
ஆனால் உடலினுள்ளே செலுத்தப்பட்ட ஸ்கானர்கள் மூலம் உடல் அங்கங்களை ஸ்கான் செய்தால் நோய்களை மென்மேலும் இலகுவாகவும், துல்லியமாகவும் இனங்காண முடியும் என விஞ்ஞானிகள் எண்ணினர்.
இந்த எண்ணத்திற்கு 13 வருட உழைப்பின் பின்னர் பயன் கிடைத்துள்ளது.
கலிபோர்னியா டேவிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்றே இந்த நவீன ஸ்கானரை வடிவமைத்துள்ளது.
இந்த ஸ்கானரானது PET, X-Ray, CT ஸ்கானர்களின் தொழில்நுட்பத்தை ஒருங்கே கொண்டதாக காணப்படுகின்றது.
மேலும் மனித உடலினுள் செலுத்தியதும் ஒரு செக்கனிலும் குறைவான நேரத்தில் முப்பரிமாண ஸ்கான் ரிப்போர்ட்டை தரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.