உலகளவில் காணப்படும் கைப்பேசி இலக்கங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடும் நிறுவனமாக Truecaller விளங்குகின்றது.
இது சுவீடனை தளமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து Truecaller வசதியினை பயன்படுத்தும் பயனர்கள் தொடர்பான தகவல்களை இந்திய சேவையகத்தில் சேமிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த வருட இறுதியில் இந்திய அளவில் இணையப்பாவனையை மேற்கொள்ளும் நபர்களின் கணினிகளை உளவு பார்க்க இந்திய அரசு சில நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருந்தது.
இந்த உளவு பார்க்கும் ஒரு அங்கமாகவே Truecaller இந்திய பயனர்களின் தகவல்களை சேமிக்கவுள்ளது.