டுவிட்ரில் கசிந்த குறுஞ்செய்திகள்: எச்சரிக்கை விடுப்பு

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

பேஸ்புக்கிற்கு அடுத்ததாக பிரபலமாக இருக்கும் டுவிட்டர் தளத்தில் குறுஞ்செய்திகள் பகிரங்கமாக வெளியானமை அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இப் பிரச்சினையை தாம் கண்டறிந்துள்ளதாக டுவிட்டர் நிறுவனமே தெரிவித்துள்ளது.

அதாவது தனிப்பட்ட முறையில் பிரத்தியேகமாக பரிமாறப்பட்ட குறுஞ்செய்திகளே இவ்வாறு ஏனையவர்களும் பார்க்கக்கூடிய வகையில் கசிந்துள்ளது.

2014 ஆம் ஆண்டு நொவெம்பர் முதல் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையான காலப்பகுதியில் தமது டுவிட்டர் மின்னஞ்சல் முகவரியினை அப்டேட் செய்தவர்களே இவ்வாறு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இக் காலப்பகுதியில் டுவிட்டர் மின்னஞ்சல் முகவரிகளை அப்டேட் செய்தவர்கள் தமது கணக்குகளை சரிமார்க்குமாறு டுவிட்டர் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers