ஆப்பிள் சாதனங்களில் அறிமுகமாகும் மைக்ரோசொப்ட் மென்பொருட்கள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கணினி உலகில் பெரும் போட்டிகொண்ட நிறுவனங்களாக மைக்ரோசொப்ட் மற்றும் ஆப்பிள் என்பன விளங்குகின்றன.

இவற்றில் ஒரு நிறுவனத்தின் உற்பத்திகளை மற்றைய நிறுவனத்தின் சாதனங்களில் மிக அரிதாகவே பயன்படுத்த முடியும்.

அதேபோன்றே Microsoft Office பக்கேஜினையும் ஆப்பிள் சாதனங்களில் இதுவரை பயன்படுத்த முடியாது இருந்தது.

ஆனால் தற்போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி ஆப்பிளின் ஆப்ஸ் ஸ்டோரிலிருந்து இவற்றினை தரவிறக்கம் செய்ய முடியும்.

குறித்த பக்கேஜினுள் Word, Excel, PowerPoint, OnNote மற்றும் OnDrive என்பன அடங்குகின்றன.

இதேவேளை தற்போது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிய CEO ஆக Satya Nadella என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers