கூகுள், பேஸ்புக் உட்பட முன்னணி வலைத்தளங்கள் மீது மேற்கொள்ளப்படும் அழுத்தம்: காரணம் இதுதான்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

சமூக வலைத்தளங்களின் அதிகரிப்பு காரணமாக தற்போது எந்தவொரு தகவலும் மிக விரைவாக பரப்பப்பட்டு வருகின்றது.

இதேபோன்றே செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் தடுப்பு மருந்துகளுக்கு எதிரான தகவல்களும் பரப்பப்பட்டு வருகின்றன.

இவ்வாறான பரப்புரைகளை மேற்கொள்ளும் வீடியோக்களுக்கு வழங்கப்பட்டிருந்த விளம்பரங்களை யூடியூப் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்னர் அகற்றியிருந்தது.

இந்நிலையில் கூகுள், பேஸ்புக் உட்பட மேலும் சில நிறுவனங்களிடம் இவ்வாறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்குமாறு அழுத்தம் பிரயோகிகக்கப்பட்டு வருகின்றது.

இந்த அழுத்தத்தினை அமெரிக்க மருத்துவச் சங்கமே மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்