அன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்யும் வசதியான கூகுள் போட்டோஸ் சேவையை வழங்கி வருகின்றது.

இச் சேவையினை மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதற்கான அப்பிளிக்கேஷன்களும் தரப்பட்டுள்ளன.

இவ் வசதியினை அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்துபவர்களுக்காக புதிய வசதி ஒன்றினை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Express Backup எனும் இவ்வசதியின் மூலம் குறைந்த வேகம் கொண்ட இணைய இணைப்பிலும் கூகுள் போட்டோஸிலுள்ள புகைப்படங்களை கூகுள் கிளவுட் ஸ்டோரேஜில் தரவேற்றம் செய்துகொள்ள முடியும்.

இதன்போது கொள்ளளவு கூடிய புகைப்படங்களை கொள்ளளவு குறைத்து தரவேற்றம் செய்யக்கூடியதாகவும் இருக்கின்றது.

மேலும் இவ்வசதி விரையில் ஆப்பிள் சாதனங்களிலும் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்