டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்யும் வசதியை நீக்கும் ஆப்பிள், கூகு‌ள் நிறுவனம்

Report Print Kavitha in ஏனைய தொழிநுட்பம்

ஆப்பிள் ‌மற்றும் கூகு‌ள் நிறுவனங்களுக்கு டிக்டாக் மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்யும் வசதியை நீக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக த‌‌கவல் வெளியாகியாகியுள்ளது.

கடந்‌த 3ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் டிக்டாக் மொபைல் செயலிக்கு தடை விதிக்குமாறு உத்தரவிட்டிருந்த போது இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீ‌திமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

‌‌இந்நிலையில் முன்னதா‌க, தங்கள் தளத்தில் இருந்த விதிமுறைகளை மீறிய 60 லட்சம் பதிவுகளை நீக்கிவிட்டதாகவும் 13 வயதுக்கு மேற்பட்டவர்களே இச்செயலியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டிக்டாக் நிர்வாகம் தெரிவித்திருந்தது.‌

குறித்த விவகாரத்தில் அரசின் விதிகளை பின்பற்றும் வகையில் தேவையா‌ன மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் டிக்டாக் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து டிக்டாக் செயலியை த‌த்தமது பிளே ஸ்டோர் மற்றும்‌ ஆப்ஸ்டோர் தளங்களில் இருந்து நீக்குமாறு, கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடிதம் ‌எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி டிக்டாக ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதுகுறித்து அதிகார‌பூர்வ அறிவிப்பு எதையும் மத்திய‌அரசு‌ ‌வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers