விரும்பிய நேரத்திற்கு தானியங்கி முறையில் மின்னஞ்சலை அனுப்புவது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

இணையம் உருவாகியதை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்ட மின்னஞ்சல் சேவையானது இன்றும் பெரும் வரவேற்பைக் கொண்டுள்ளதாக காணப்படுகின்றது.

அதிகரித்த பாவனை மற்றும் வரவேற்பினை அடிப்படையாகக் கொண்டு புதிய வசதிகள் பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இதேபோன்று கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் தற்போது தானியங்கி முறையில் விரும்பிய நேரத்திற்கு மின்னஞ்சலை அனுப்பக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜிமெயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டு 15 வருடங்கள் நிறைவையொட்டி இப் புதிய வசதி பயனர்களுக்காக தரப்பட்டுள்ளது.

இதனை செயற்படுத்துவதற்கு வழமை போன்று மின்னஞ்சல் ஒன்றினை தயார் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் Send பொத்தானுடன் காணப்படும் அப்புக்குறியினை கிளிக் செய்யவும்.

அப்போது தோன்றும் Shedule Send என்பதை தெரிவு செய்யவும்.

தொடர்ந்து தோன்றும் சிறிய நாள்காட்டி விண்டோவில் அனுப்ப வேண்டிய தினம் மற்றும் நேரம் என்பவற்றினை தெரிவு செய்யவும்.

பயனர் ஒருவர் அதிக பட்சமாக 10 நாட்கள் வரையில் தெரிவு செய்து இவ்வாறு மின்னஞ்சலை தானியங்கி முறையில் அனுப்ப முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்