எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை கண்டுபிடிப்பது எப்படி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

இன்றைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் காட்சிகளை விரும்பியவாறு உருவாக்கக்கூடிய நிலையும், மாற்றியமைக்கக்கூடிய நிலையும் காணப்படுகின்றது.

இதனால் போலியான புகைப்படங்களை உருவாக்குவதும் அதிகரித்து வருகின்றது.

எனினும் போலியாக எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை இனங்காண்பதற்கு சில வழிமுறைகள் காணப்படுகின்றன.

இவை தவிர மென்பொருட்களும் உதவியாக இருக்கின்றன.

ஒரு புகைப்படத்தினை நேரடியாக பார்க்கும்போது பின்வரும் அறிகுறிகளுள் ஏதாவது தென்பட்டால் அவை போலியான புகைப்படங்கள் அல்லது எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் எனும் முடிவுக்கு வரலாம்.

இதன்படி,

  • வளைந்த பின்னணிகள் காணப்படல்.

  • ஒளியின் தன்மையை கொண்டு கண்டறியலாம் - அதாவது புகைப்படத்தில் உள்ள உருவங்களின் நிழல் விழும் திசைகள் ஒன்றுக்கொன்று மாறுபடும் எனின் அவை போலியான புகைப்படங்கள் ஆகும்.

  • தரம் குறைந்திருத்தல் - கமெராவினைக் கொண்டு எடுக்கப்படும் படங்கள் பொதுவாக எடிட் செய்யப்பட்ட படங்களை விடவும் தரம் கூடியவையாகும்.

  • போட்டோ ஷொப்பினை துல்லியமான முறையில் பயன்படுத்தாமையினால் ஏற்படக்கூடிய தவறுகளைக் கொண்டு இனம் காண முடியும்.

இவற்றினை விட Fotoforensics, Izitru போன்ற அப்பிளிக்கேஷன்களும் காணப்படுகின்றன.

இவற்றில் குறித்த புகைப்படங்களை தரவேற்றம் செய்து சில பரிசீலிப்புக்களை மேற்கொள்வதன் ஊடாக எடிட் செய்யப்பட்ட அல்லது போலியான புகைப்படங்களை கண்டறிய முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers