கூகுள் குரோம் உலாவியில் Dark Mode வசதியை உருவாக்குவது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

தற்போது ஸ்மார்ட் கைப்பேசிகளை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.

இதனை தடுப்பதற்காக ஒவ்வொரு அப்பிளிக்கேஷன்களிலும் Dark Mode வசதி அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.

அதேபோன்றே கூகுளின் இணைய உலாவியான குரோமிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனினும் இவ் வசதி குரோம் 74 பதிப்பில் மாற்றம் தரப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய பதிப்புக்களில் பெற முடியாது.

எனவே முதலில் கூகுள் குரோம் உலாவியை அப்டேட் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் முகவரிப் பட்டையினுள் (Address Bar) chrome://flags என தட்டச்சு செய்து அம் முகவரிக்கு செல்ல வேண்டும்.

அதனை தொடர்ந்து தோன்றும் விண்டாவில் Android Chrome UI dark mode அல்லது Dark Mode என தேடும்போது காண்பிக்கப்படும் வசதியில் default என இருப்பதை Enable செய்ய வேண்டும்.

அதன் பின்னர் குரோம் உலாவி மீண்டும் இயங்கும்போது Settings பகுதிக்கு சென்று Dark Mode என்பதை தெரிவு செய்தால் போதும் இவ் வசதி கிடைக்கப்பெறும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்