கூகுள் குரோமில் மறைந்திருக்கும் Home பொத்தானை மீளக் கொண்டுவருவது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

முன்னணி இணைய உலாவியான கூகுள் குரோமில் பொதுவாக Home பொத்தான் ஆனது மறைக்கப்பட்டிருக்கும்.

இப் பொத்தானை கிளிக் செய்வதன் ஊடாக New Tab பக்கத்தினை பெற முடியும் அல்லது ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் இணையத்தளத்திற்கு செல்ல முடியும்.

மிகவும் பயனுள்ள இவ் வசதியினைப் பெறுவதற்கு முதலில் குரோமின் Settings பகுதிக்கு செல்ல வேண்டும்.

தொடர்ந்து Appearance என்பதன் கீழாக இருக்கும் Show Home Button என்தை Enable செய்ய வேண்டும்.

இதன்போது அடிக்கடி பயணம் செய்ய வேண்டிய இணையத்தளத்தினை உட்புகுத்த முடியும்.

இதற்கு Show Home Button என்பதன் கீழாக காணப்படும் Enter Custom Web Address என்பதில் இணைய முகவரியினை வழங்க வேண்டும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்