மேலும் பல மொழிகளை இனங்காணக்கூடிய வகையில் மேம்படுத்தப்பட்டது கூகுள் அஸிஸ்டன்ட்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

பயனர்களின் இணையப் பயன்பாடு மற்றும் கணினி சார்ந்த செயற்பாடுகளை இலகுவாக்கும் வகையில் கூகுள் நிறுவனம் கூகுள் அஸிஸ்டன்ட் எனும் சாதனத்தினை அறிமுகம் செய்திருந்தது.

அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் அஸிஸ்டன்ட் தற்போது மேலும் பல மொழிகளை இனம் கண்டு செயற்படக்கூடியதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

முதலில் ஆங்கிலத்தை மாத்திரமே இனம் காணக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்தியா, ஐக்கிய ராச்சியம், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் மேலும் சில மொழிகளில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வசதியானது கடந்த 2018 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

எனினும் அப்போது கூகுள் ஹோம் சாதனத்தில் மாத்திரமே கிடைக்கக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்