விண்டோஸ் 10 கணினிகளின் File Explorer இல் Dark Mode வசதியை தோற்றுவிப்பது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

தற்போது Dark Mode வசதியானது கணினிகள், மொபைல் சாதனங்கள் என்பவற்றில் பயன்படுத்தப்படும் அப்பிளிக்கேஷன்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதேபோன்று கணினிகளில் கோப்புக்களை சேமிப்பதற்கும், மீண்டும் தேடிப் பயன்படுத்துவதற்கும் தரப்பட்டுள்ள வசதியான File Explorer இலும் Dark Mode வசதியினை பயன்படுத்தலாம்.

இவ் வசதியினைப் பெற்றுக்கொள்வதற்கு Start Menu சென்று Settings எனும் பகுதிக்கு முதலில் செல்ல வேண்டும்.

அதன் பின்னர் Personalization என்பதை தெரிவு செய்து அதில் Colors ஐ கிளிக் செய்ய வேண்டும்

அதில் More options என்பதன் கீழாக Dark எனும் வசதி தென்படும்.

அதனை தெரிவு செய்தால் போதும் File Explorer இல் Dark Mode வசதி தோன்றிவிடும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்