Apple Pay, Google Pay தொடர்பில் பிரித்தானிய மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ஆப்பிள் நிறுவனம் மற்றும் கூகுள் நிறுவனம் என்பன தமது பயனர்கள் இலகுவான முறையில் தமது நிறுவனங்களின் உற்பத்திகளை விலைகொடுத்து வாங்குவதற்கும், தனிப்பட்ட பணப்பரிமாற்றங்களை மேற்கொள்வதற்குமான வசதிகளை ஆரம்பித்துள்ளன.

உலக அளவில் குறிப்பிட்ட சில நாடுகளிலேயே Apple Pay, Google Pay எனும் இந்த இரு வசதிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இப்படியிருக்கையில் பிரித்தானிய அரசு முதன் முறையாக இச் சேவையினை அங்கீகரிக்க ஆரம்பித்துள்ளது.

எனினும் முதற்கட்டமாக குறிப்பிட்ட சில வகை சேவைகளுக்கு மாத்திரமே Apple Pay, Google Pay என்பவற்றினை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதி முறையாக பயன்படுத்தப்படும் பட்சத்தில் ஏனைய பல சேவைகளுக்கும் விஸ்தரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers