வாட்ஸ் ஆப் செயலி மூலம் ஊடுருவும் இஸ்ரேலின் Spyware: தடுப்பது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

பேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டு அதிகளவு பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப்பின் ஊடாக Spyware பரவி வருகின்றது.

வாட்ஸ் ஆப் இலக்கத்திற்கு அழைப்பு ஒன்றினை ஏற்படுத்துவதன் ஊடாக அல்லது தவறிய அழைப்பு ஒன்றினை (Missed Call) ஏற்படுத்துவதன் ஊடாக குறித்த Spyware பரப்பப்படுகின்றது.

இதன் ஊடாக கைப்பேசியின் கமெராவினை செயற்படுத்தல், நுனுக்குப்பன்னியை செயற்படுத்தல் ஊடாக தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படுவதுடன், மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், அமைவிடம் (Location) என்பவற்றின் தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன.

குறித்த Spyware ஆனது ஸ்ரேலில் உள்ள NSO குழுவினால் உருவாக்கப்பட்டதாகும்.

இதனால் கூகுளின் அன்ரோயிட் மற்றும் ஆப்பிளின் iOS சாதனங்கள் என்பன பாதிப்புக்கு உள்ளாகின்றன.

இதனை தடுக்கும் வகையில் வாட்ஸ் ஆப்பின் புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனவே அன்ரோயிட் மற்றும் iOS பயனர்கள் புதிய வாட்ஸ் ஆப் செயலியை அப்டேட் செய்வதன் ஊடாக இப் பிரச்சினையை தவிர்க்க முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers