ஜிமெயிலில் உள்ள தரவுகளை பேக்கப் செய்வது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

வியாபார ரீதியான தகவல்கள் உட்பட மிகவும் முக்கியமான தரவுகளை இழப்பதற்கு எவரும் விரும்பமாட்டார்கள்.

இத் தரவுகள் மின்னஞ்சல் ஊடாக பரிமாறப்படும்போது அவற்றினை பாதுகாத்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

இதற்காக மின்னஞ்சல் சேவைகளில் பேக்கப் எனப்படும் வசதிகள் வழங்கப்படுகின்றன.

இவ் வசதியானது கூகுளின் ஜிமெயில் சேவையிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பின்வரும் படிமுறைகள் ஊடாக ஜிமெயில் தரவுகளை இலகுவாக பேக்கப் செய்துகொள்ள முடியும்.

முதலில் இணைய உலாவியை திறந்து https://takeout.google.com/ எனும் முகவரிக்கு செல்லவும்.

அதன் பின்னர் ஜிமெயில் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி லாக்கின் செய்யவும்.

அதன் பின்னர் எந்த எந்த சேவைகளை உங்கள் கணினிகளில் தரவிறக்கம் செய்ய வேண்டும் என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

அதாவது Gmail, Maps, Activities, News, Calendar, Contacts, Youtube போன்றவற்றின் தரவுகளை தரவிறக்கம் செய்ய முடியும்.

இவற்றில் தேவையானவற்றினை தெரிவு செய்ய முடியும்.

தெரிவு செய்ததன் பின்னர் Next Step எனும் பொத்தானை அழுத்தவும்.

தொடர்ந்து கோப்பு வகை மற்றும் கோப்பின் அளவு போன்றவற்றினை தெரிவு செய்து Create Archive என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது தரவுகள் தரவிறக்கம் செய்யப்பட ஆரம்பிக்கும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்