வாட்ஸ் ஆப் மூலம் கைப்பேசியில் அதிக சேமிப்பு இடத்தை பிடிக்கும் நண்பரை கண்டுபிடிப்பது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

முன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப்பின் ஊடாக எழுத்து வடிவிலான குறுஞ்செய்திகள் உட்பட வீடியோ, ஆடியோ, புகைப்படங்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் போன்றன பரிமாறப்படுகின்றன.

இக் கோப்புக்கள் தரவிறக்கம் செய்யப்படும்போது ஸ்மார்ட் கைப்பேசியில் அதிகளவு இடத்தைப் பிடிக்கும்.

சில வாட்ஸ் ஆப் நண்பர்கள் தொடர்ச்சியாக அநாவசியமற்ற கோப்புக்களை பகிர்ந்தவாறு இருப்பார்கள்.

இந்நிலையில் எந்த நண்பரால் கைப்பேசியில் வாட்ஸ் ஆப் ஊடாக அதிக இடம் பிடிக்கப்படுகின்றது என்பதை கண்டறிய முடியும்.

முதலில் வாட்ஸ் ஆப் செயலியை இயக்கி அதன் Settings பகுதிக்கு செல்ல வேண்டும்.

பின்னர் Data and Storage usage என்பதை தெரிவு செய்யவும்.

தொடர்ந்து Storage Usage என்பதை தெரிவு செய்யும்போது நண்பர்கள் பகிர்ந்த கோப்புக்களின் அளவின்படி அவர்களை வரிசைப்படுத்தி காண்பிக்கும்.

இதன் மூலம் அதிகளவு சேமிப்பு இடத்தை பிடித்த நண்பரை கண்டறிய முடியும்.

இப் படிமுறைகளை அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்கள் இரண்டிலும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்