வாகனங்கள் தொடர்பான பத்திரங்களை உங்கள் ஸ்மார்ட் கைப்பேசியில் எடுத்துச் செல்வது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

வாகனங்களில் பயணிக்கும்போது சாரதி அனுமதிப்பத்திரம் உட்பட வாகனங்கள் தொடர்பான பத்திரங்களையும் எடுத்துச்செல்ல வேண்டியது அவசியம் ஆகும்.

எனினும் இன்றைய இயந்திர உலகில் பலரும் இதனை மறந்துவிடுகின்றனர்.

இப் பிரச்சினைக்கு தீர்வாக ஸ்மார்ட் கைப்பேசி அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

mParivahan எனும் குறித்த அப்பிளிக்கேஷனை இந்தியாவில் மாத்திரமே பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.

இதனை ஆப்பிளின் ஆப்ஸ் ஸ்டோர் அல்லது கூகுளின் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

பின்னர் அப்பிளிக்கேஷனை ஓப்பன் செய்து மொபைல் இலக்கத்தினை வழங்கி ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

பின்னர் RC டேப்பினை கிளிக் செய்து அதில் வாகன இலக்கத்தினை வழங்கி தேடும்போது அப்பிளிக்கேஷனானது தானாகவே வாகனத்தின் பதிவு இலக்கத்தினை பெற்று காண்பிக்கும்.

இதனை Add to Dashboard எனும் பொத்தானை அழுத்தி அப்பிளிக்கேஷனில் நிரந்தரமாக சேமித்துக்கொள்ள முடியும்.

அதேபோன்று சாரதி அனுமதிப்பத்திர இலக்கத்தினை வழங்கி தேடுவதன் ஊடாக அது தொடர்பான தரவுகளையும் பெற்று Dashboard இல் பதிந்து வைத்திருக்க முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்