iOS 13 அப்டேட்டில் பயனர்களை கவர உள்ள புதிய அம்சம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்கள், ஐபேட்கள் மற்றும் ஐபொட்கள் என்பவற்றிற்கான iOS இயங்குதளத்தின் புதிய பதிப்புக்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக தற்போது iOS 13 எனும் பதிப்பினை அறிமுகம் செய்யவுள்ளது.

இப் பதிப்பில் முன்னைய பதிப்புக்களில் இல்லாத புதிய வசதி ஒன்று தரப்படவுள்ளது.

அதாவது மொபைல் சாதனங்களில் நிறுவப்பட்டுள்ள அப்பிளிக்கேஷன்கள் தானாகவே அப்டேட் ஆவற்கான செய்தியை காண்பிக்கக்கூடியன.

இச் செய்தியின் அடிப்படையில் அப்பிளிக்கேஷன்களை அப்டேட் செய்வதற்கான அனுமதியை பயனர் வழங்கலாம் அல்லது தானாகவே அப்டேட் செய்ய அனுமதிக்கலாம்.

ஆனால் புதிய வசதியின்படி அப்டேட் கேட்கும் அப்பிளிக்கேஷன்களை குறித்த பட்டியலில் இருந்து நீக்கிவிட முடியும்.

அவ்வாறு நீக்கிவிட்டால் அதன் பின்னர் அப்டேட் கேட்காது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers