விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்களுக்கு மைக்ரோசொப்ட் தரும் மகிழ்ச்சியான செய்தி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளங்களில் முன்னர் மைக்ரோசொப்ட் இன்டெர்நெட் எக்ஸ்ப்புளோரர் இணைய உலாவி பயன்படுத்தப்பட்டு வந்தமை அனைவரும் அறிந்ததே.

எனினும் இவ் உலாவியின் வேகம் இன்மை மற்றும் மேலும் சில குறைபாடுகள் காரணமாக விண்டொஸ் 10 இயங்குதளத்துடன் எட்ஜ் எனும் மற்றுமொரு இணைய உலாவியினை அறிமுகம் செய்திருந்தது.

இவ் உலாவி பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெற்றுள்ளது.

இதன் காரணமாக தற்போது விண்டோஸ் 7, விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 இயங்குதளங்களிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் குறித்த உலாவியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்