5 நகரங்களில் வெற்றிகரமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 5G தொழில்நுட்பம்: எங்கு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ஐந்தாம் தலைமுறை மொபைல் வலையமைப்பு தொழில்நுட்பத்தினை முதன் முறையாக அறிமுகம் செய்யும் நாடுகளில் ஐக்கிய இராச்சியமும் இடம்பிடித்துள்ளது.

இங்கு சுமார் 5 நகரங்களில் இத் தொழில்நுட்பம் வெற்றிகரமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பிரபல மொபைல் வலையமைப்பு சேவை வழங்கும் நிறுவனமான EE இச் சோதனை முயற்சியினை மேற்கொண்டுள்ளது.

5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட OnePlus 7 Pro ஸ்மார்ட் கைப்பேசி இதன்போது பயன்படுத்தப்பட்டுள்ளது.

சோதனையின்போது இணைய வேகமானது ஆச்சரியப்படத்தக்க வகையில் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் இதன்போது சில இடர்பாடுகளை எதிர்நோக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்