ஜுன் 28 ஆம் திகதி முதல் 5G தொழில்நுட்பத்தினை பயன்படுத்தலாம்: எங்கு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

அனேகமான நாடுகளில் 5G தொழில்நுட்பம் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது.

இதனால் பயனர்கள் 5G தொழில்நுட்பத்தினை அனுபவிக்கக்கூடிய வகையில் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதன் அடிப்படையில் அமெரிக்காவில் T-Mobile நிறுவனம் எதிர்வரும் ஜுன் 28 ஆம் திகதி இத் தொழில்நுட்பத்தை பயனர்களுக்காக அறிமுகம் செய்கின்றது.

இதனை Samsung Galaxy S10 5G கைப்பேசியுடன் இச் சேவை அறிமுகம் செய்யப்படுகின்றது.

இகை் கைப்பேசியினை 1,299 டொலர்கள் செலுத்தி T-Mobile நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

அல்லாவிடில் முதலில் 549.99 டொலர்கள் செலுத்தி பின்னர் 31.25 டொலர்கள் எனும் மாதாந்த தவணைக் கட்டணத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.

எவ்வாறெனினும் 5G சேவையாது அமெரிக்காவின் குறிப்பிட்ட சில நகரங்களில் மாத்திரமே முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்