கூகுள் மேப்பிலிருந்து வரும் அதிகளவான நோட்டிபிக்கேஷன்களை குறைப்பது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கூகுள் மேப் சேவையின் உள்ளே பயனர்களுக்கு பயன்தரக்கூடிய பல உப சேவைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த ஒவ்வொரு வகையான சேவைகளில் இருந்தும் மொபைல் சாதனத்திற்கு அடிக்கடி நோட்டிபிக்கேஷன்கள் வந்துகொண்டே இருக்கும்.

சில சமயங்களில் இது அசௌகரியமாக இருக்கலாம்.

இப் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு வழிமுறையும் கூகுள் மேப்பில் தரப்பட்டுள்ளது.

அன்ரோயிட் சாதனங்களில் பின்வரும் படிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நோட்டிபிக்கேஷன்களை குறைக்க முடியும்.

முதலில் கூகுள் மேப்பினை திறந்து மெனு பொத்தானை அழுத்தவும்.

பின்னர் Settings என்பதை தெரிவு செய்யவும்.

இப் பகுதியில் காணப்படும் Notifications என்பதை கிளிக் செய்தால் பல்வேறு வகையான Notifications வகைகள் காணப்படும்.

இவற்றில் அவசியம் இல்லாதவற்றின் மீதான தெரிவை நீக்கினால் போதும்.

இவ்வாறே iOS சாதனங்களில் இதனை செயற்படுத்துவதற்கு பின்வரும் படிமுறைகளை பின்பற்றவும்.

முதலில் கூகுள் மேப் அப்பிளிக்கேஷன் மீது சிறிது நேரம் அழுத்திப் பிடிக்கவும்.

பின்னர் "i" என தென்படும் (Information) பொத்தானை கிளிக் செய்யவும்.

அடுத்து தோன்றும் App info பக்கத்தில் உள்ள Notifications என்பதில் தேவையற்றவற்றின் தெரிவை நீக்கிவிடவும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers