யூடியூப் மியூசிக்கில் தரப்படும் Smart Downloads வசதி பற்றி தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

யூடியூப் மியூசிக் சேவைக்கான அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு ஒன்று விரைவில் அறிமுகமாகவுள்ளது.

இதில் Offline Mixtape, Smart Downloads எனும் வசதிகள் உள்ளடக்கப்படவுள்ளன.

இணைய இணைப்ப இல்லாத நிலையில் பாடல்களை கேட்டு மகிழ்வதற்கான வசதியே Offline Mixtape ஆகும்.

இதில் தரப்பட்டுள்ள Smart Downloads எனும் மற்றுமொரு வசதியின் ஊடாக 500 பாடல்கள் வரை தானாகவே தரவிறக்கம் செய்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

இணைய வசதி இல்லாத நேரத்தில் கேட்டு மகிழ்வதற்கு பாடல்களை தானியங்கி முறையில் தரவிறக்கம் செய்துகொள்ளப்பட வேண்டிய பாடல்களின் எண்ணிக்கையை தெரிவு செய்துகொள்ள முடியும்.

இதன் உயர்ந்த பட்ச எண்ணிக்கை 500 ஆகும்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பாடல்கள் Smart Downloads வசதியின் ஊடாக இரவு நேரங்களில் மொபைல் சாதனம் Wi-Fi இணைப்பில் இருக்கும்போது தரவிறங்க ஆரம்பித்துவிடும்.

அதன் பின்னர் குறித்த பாடல்களை இணைய இணைப்பு இன்றி எந்தவொரு நேரத்திலும் கேட்டு மகிழ முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்