ஈமெயில் மூலம் திருடப்படும் தகவல்கள்: தடுப்பது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

தற்போதைய வியாபார உலகில் பல விளம்பரங்கள் அனுமதியின்றி மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

அதுமாத்திரமன்றி மின்னஞ்சல்கள் ஊடாக தகவல்கள் திருடப்படுவதும் காலாகாலமாக இடம்பெற்று வருகின்றது.

இதற்காக அனுப்பப்படும் மின்னஞ்சல்களில் சிறிய பிக்ஸல் கொண்ட புகைப்படம் ஒன்றும் Embed செய்து அனுப்பப்படும்.

இப் புகைப்படம் கண்ணுக்கு தெரியாது.

ஒருவர் தனக்கு வந்த மின்னஞ்சலினை திறக்கும்போது குறித்த புகைப்படத்துடன் இணைக்கப்பட்டுள்ள Code ஆனது தகவல்களை திரட்டி அனுப்புகின்றது.

இவ்வாறு திரட்டி அனுப்பப்படும் தகவல்கள் திருடப்படும் நிறுவனத்தின் சேர்வர்களில் சேமிக்கப்படுகின்றது.

இதனை தடுப்பதற்கு Ugly Mail மற்றும் PixelBlock போன்ற கூகுள் குரோம், பையர்பாக்ஸ் நீட்சிகள் காணப்படுகின்றன.

எனினும் இதனை விடவும் இலகுவான முறை ஒன்று ஜிமெயிலில் தரப்பட்டுள்ளது.

இதன்படி முதலில் ஜிமெயிலில் சென்று Settings என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

பின்னர் General என்பதில் உள்ள Images பகுதிக்கு செல்ல வேண்டும்.

இங்கு Ask before displaying external images என்பதை தெரிவு செய்யவும்.

அதன் பின்னர் கீழ்ப் பகுதியில் உள்ள Save Changes என்பதை அழுத்தி மாற்றங்களை சேமிக்கவும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்