குரோம் உலாவியில் புதிய வசதி: சோதனை செய்கிறது கூகுள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள குரோம் இணைய உலாவியே இன்று உலகளவில் அதிக பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த உலாவியில் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்வதற்கான சோதனை முயற்சியில் கூகுள் நிறுவனம் தற்போது ஈடுபட்டுள்ளது.

இதன்படி Play Button வசதியினை குரோம் உலாவியில் தருவதற்கு காத்திருக்கின்றது கூகுள்.

இதன் மூலம் இணையப் பக்கங்களில் உள்ள வீடியோக்கள், ஆடியோக்கள் என்வற்றினை பிளே செய்யவும், நிறுத்தவும் முடியும்.

இவ் வசதியானது குரோமின் டூல்பாரில் தரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Global Media Controls எனப்படும் இப் புதிய வசதியினை குரோமின் Canary பதிப்பினை வைத்திருப்பவர்கள் தற்போது பயன்படுத்த முடியும்.

குரோம் உலாவியில் chrome://flags/ என தட்டச்சு செய்து பெறப்படும் பொப் அப் விண்டோவில் Global Media Controls என தேடவும்.

பின்னர் குறித்த வசதியினை Enable செய்தால் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்