அரச உத்தியோகத்தர்கள் பணியிலிருக்கும்போது பேஸ்புக் மாத்திரமன்றி இவற்றினையும் பயன்படுத்த தடை

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

இன்று அதிகரித்துள்ள சமூகவலைத்தளங்கள் அனைத்து வயதினரையும் வெகுவாக தம்பக்கம் ஈர்த்து வைத்திருக்கின்றன.

இது அரச உத்தியோகத்தர்களையும் விட்டு வைக்கவில்லை.

அவர்கள் பணிகளில் இருக்கும்போது கூட ஸ்மார்ட் கைப்பேசிகளில் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் இந்தியாவின் National Information Security Policy & Guidelines அமைப்பானது புதிய விதிமுறை ஒன்றினை அமுல்படுத்தியுள்ளது.

இதன்படி அரச உத்தியோகத்தர்கள் பணியிலிக்கும்போது பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களை மாத்திரமன்றி கூகுள் ட்ரைவ், ட்ரொப் பொக்ஸ், ஐகிளவுட், பென்ட்ரைவ் போன்றவற்றினையும் பயன்படுத்த முடியாது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers