ஆபாச இணையத்தளங்கள் பார்வையிடுவதை கூகுளுக்கும், பேஸ்புக்கிற்கும் எப்பவும் மறைக்க முடியாது

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ஆபாச இணைத்தளங்களை பார்வையிடுவதற்கு பலர் Incognito முறையிலான இணையத்தேடல்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இது ஒரு பாதுகாப்பான இணையத்தேடல் முறை என்பதே பிரதான காரணம் ஆகும்.

எனினும் இவ்வாறான முறையில் ஆபாச இணையத்தளங்களை பார்வையிடுவதை கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கண்காணிக்க முடியும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Carnegie Mellon பல்கலைக்கழகம் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் என்பவற்றுடன் இணைந்து மைக்ரோசொப்பட் நிறுவனம் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது 22,484 ஆபாச இணையத்தளங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 93 சதவீதமான இணையத்தளங்கள் பயனர்களின் தரவுகளை மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இம் மூன்றாம் தரப்பு நிறுவனங்களுள் முதலாவதாக கூகுள் நிறுவனம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை Incognito முறையில் இணையத்தளங்களை பார்வையிடும்போது History கணினிகளில் சேமிக்கப்படுவது தவிர்க்கப்டுமே அன்றி முழுமையான பாதுகாப்பினை தராது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers