பிரபல வங்கியின் பல மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

Capital One ஆனது அமெரிக்காவின் வேர்ஜினியாவை தலைமையமாகக் கொண்டு இயங்கும் பிரபல வாங்கியாகும்.

இவ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் சுமார் 106 மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க புலனாய்விற்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த ஹேக்கிங்குடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதேவேளை தகவல்கள் ஹேக் செய்யப்பட்ட 106 மில்லியன் வாடிக்கையாளர்களில் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் அமெரிக்காவை சேர்ந்தவர்கள்.

எஞ்சிய 6 மில்லியன் வாடிக்கையாளர்கள் கனடாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers