சைகை மொழியை அடையாளம் காணும் மென்பொருளை உருவாக்கும் கூகுள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கை மூலம் காட்டப்படும் சைகைகளை அடையாளம் கண்டு ஒலி வடிவில் வெளியிடக்கூடிய மென்பொருள் ஒன்றினை உருவாக்கி வருவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான சில மென்பொருட்கள் தற்போது டெக்ஸ்டாப் மற்றும் லேப்டொப் கணினிகளில் பயன்பாட்டில் உள்ளன.

எனவே கூகுள் நிறுவனம் மொபைல் சாதனங்களுக்கான மென்பொருளையே தற்போது வடிவமைப்பு செய்து வருகின்றது.

இதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படவுள்ளது.

விரல்களின் அசைவுகளை கொண்டே சைகை மொழி இனங்காணப்படவுள்ளது.

விரல் அசைவுகளை இனங்காணக்கூடிய வகையில் 21 புள்ளிகளை கொண்ட வரைபு பயன்படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்