கூகுளின் Hangouts சேவை நிறுத்தம்: எனினும் இவர்கள் பயன்படுத்தலாம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
36Shares

கூகுள் நிறுவனம் சில வருடங்களுக்கு முன்னர் Hangouts Chat எனும் சேவையை அறிமுகம் செய்திருந்தது.

இதன் ஊடாக வீடியோ சட், ஆடியோ சட் மற்றும் குறுஞ்செய்திகள் என்பவற்றினை பரிமாறிக்கொள்ள முடியும்.

இதற்காக ஜிமெயில் மின்னஞ்சல் முகவரியை கொண்டிருந்தால் மாத்திரம் போதுமானது.

இவ்வாறான சேவையினை கூகுள் நிறுவனம் எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் நிறுத்தவுள்ளது.

எனினும் G Suite வாடிக்கையாளர்கள் இச் சேவையினை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அடுத்த ஒரு வருட காலத்திற்கு மாத்திரமே இச் சலுகை வழங்கப்படவுள்ளது.

இதன்படி அடுத்த வருடம் ஜுன் மாதத்துடன் Hangouts Chat சேவை முற்றிலுமாக நிறுத்தப்படும் என தெரிகிறது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்