வெடிகுண்டு தாக்குதல்..நாசிக்கு ஆதரவு.. அதிர்வலையை ஏற்படுத்திய ட்விட்டர் நிறுவனர்: வெளியான பின்னணி

Report Print Basu in ஏனைய தொழிநுட்பம்

ட்விட்டர் சமூக வலைதளத்தின் நிறுவனர் ஜேக் டோர்சியின் ட்விட்டர் கணக்கில் பல மோசமான ட்விட்கள் பதவிடப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜேக் டோர்சியின் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியது குறித்து ட்விட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.

தலைமை செயல் அதிகாரியான ஜேக் டோர்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் திடீரென இனவெறி கருத்துக்களும், ஹிட்லரின் நாசி ஜெர்மனிக்கு ஆதரவான கருத்துகளும் பதிவிடப்பட்டன.

ஹிட்லர் வாழ்க, ட்விட்டர் தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு உள்ளது என்பது உள்ளிட்ட ட்வீட்கள் பதிவிடப்பட்டன. சில மணி நேரத்தில் இந்த பதிவுகள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தின.

ஜேக்கை பின் தொடருபவர்கள் இதுக் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்ப தொடங்கின. சிறிது நேரத்தில் அவரது கணக்கு மீட்கப்பட்டு அந்த ட்வீட்டுகள் நீக்கப்பட்டன. இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம், ஜேக் டோர்சியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தது.

ட்விட்டர் அதன் எஸ்எம்எஸ் சேவையை மேம்படுத்துவதற்காக வாங்கிய Cloudhopper வழியாக மோசமான ட்விட்டுகள் பதிவிடப்பட்டன என TechCrunch தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. ஜேக்கின் கணக்கு முன்பு 2016-ல் ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்