பாட்டுப் பிரியர்களை ஆக்கிரமித்த Walkman சாதனம்: 40 வருட பூர்த்தியை கொண்டாடும் சோனி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ஸ்மார்ட் கைப்பேசிகளின் வரவினை அடுத்து தற்போது செல்லுமிடமெல்லாம் பாடல்களை கேட்டு மகிழ்வது மிகவும் இலகுவாக இருகின்றது.

ஆனால் இரு தசாப்தங்களுக்கு முன்னர் பாடல்களை கேட்டு மகிழ Walkman சாதனமே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது.

இச்சாதனத்தினை முதன் முதலாக சோனி நிறுவனமே அறிமுகம் செய்திருந்தது.

இவ்வாறு அறிமுகம் செய்து தற்போது 40 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.

இதனை கொண்டாடும் முகமாக ஜப்பானின் டோக்கியோ நகரில் கண்காட்சி ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இக் கண்காட்சியில் சோனி நிறுவனம் அறிமுகம் செய்த விதம் விதமான Walkman சாதனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers