ஸ்தம்பிதம் அடைந்த ஆப்பிள் ஒன்லைன் ஸ்டோர்: காரணம் இதுதான்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய ஐபோன், ஐபேட் மற்றும் ஆப்பிள் வாச் என்பவற்றினை விரைவில் விற்பனைக்கு விடவுள்ளது.

இச் சாதனங்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் இடம்பெறும் இந் நிகழ்வானது நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் நேற்றைய தினம் ஆப்பிளின் ஒன்லைன் ஸ்டோரானது சில மணி நேரங்கள் வழமைக்கு மாறாக கறுப்பு நிற பின்னணியில் ஆப்பிள் லோகோவை தாங்கியிருந்தது..

புதிய சாதனங்களின் வருகையினை பயனர்கள் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காகவே மேற்கண்டவாறு தளம் ஸ்தம்பிதம் அடையச் செய்யப்பட்டுள்ளது.

எனினும் பின்னர் குறித்த தளம் வழமைக்கு திரும்பியுள்ளது.

ஒவ்வொருவருடமும் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய சாதனங்களை அறிமுகம் செய்யும் தருணங்களில் இவ்வாறான ஸ்தம்பிதம் இடம்பெறச் செய்யப்படுவது வழமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்