உலகளவில் பயன்படுத்தக்கூடிய ஆப்பிளின் கிரடிட் கார்ட் விரைவில்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

அண்மையில் ஆப்பிள் நிறுவனம் தனது கிரடிட் கார்ட்டினை அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.

வங்கிகளை விடவும் குறைந்த வட்டி மற்றும் நீண்ட கால தவணைக் கொடுப்பனவு முறை என பயனர்களை கவர்ந்திழுக்கும் சலுகைகள் இக் கிரடிட் கார்ட்டில் காணப்படுகின்றன.

எனினும் இக் கார்ட் ஆனது முதன் முறையாக அமெரிக்காவில் மாத்திரமே பாவனைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் உலகளாவிய ரீதியில் பயன்படுத்தக்கூடிய கிரடிட் கார்ட் உருவாக்கப்பட்டுவருவதாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான டிம் குக் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனிய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் இக் கார்ட்டிற்கு இலக்கங்களோ, CVV குறியீடுகளோ, முடிவடையும் திகதியோ அல்லது கையொப்பமோ தேவையில்லை.

மேலும் உடனடி அனுமதி (Approval) மற்றும் காலக்கெடு முடிந்தபின்னரும் கட்டண அறவீடு இன்மை என்பனவும் காணப்படுகின்றன.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்