ஆயிரக்கணக்கான மெயில்களை ஹேக் செய்த யாகூவின் முன்னாள் மென்பொருள் பொறியியலாளர்: அதிர்ச்சி காரணம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

யாகூ நிறுவனத்தின் மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றி பின்னர் விலகிய நபர் ஒருவர் ஆயிரக்கணக்கான யாகூ மெயில்களை ஹேக் செய்துள்ளார்.

34 வயதான Reyes Daniel Ruiz என்பவரே இந்த நாசச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

சுமார் 6,000 மெயில்கள் ஹேக் செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் Ruiz.

பெண் பயனர்களின் மின்னஞ்சல்களையே குறி வைத்து ஹேக் செய்திருந்ததுடன் அவர்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கைப்பற்றுவதற்காகவே இவ்வாறு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஹேக் செய்யப்பட்ட மின்னஞ்சல்களில் இவரின் நெருங்கிய நண்பிகளின் மின்னஞ்சல் முகவரிகளும் அடங்கும்.

மேலும் இவ்வாறு பெறப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆபாச இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கப்படயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்