Levi உடன் இணைந்த கூகுள்: அறிமுகமாகும் அட்டகாசமான உற்பத்தி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ஸ்மார்ட் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய அணியக்கூடிய உடைகளை அறிமுகம் செய்வதற்கு கூகுள் நிறுவனம் முயற்சி செய்து வந்தது.

இதன் காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் Levi நிறுவனத்துடன் இணைந்து ஜக்கெட்களை வடிவமைப்பு செய்து வந்தது.

இதற்கான திட்டத்திற்கு Project Jacquard எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது இவை விற்பனைக்கு வரவுள்ளன. எனினும் இவற்றின் விலையானது மிகவும் அதிகமாகும்.

அதாவது சிறிய அளவிலான ஜக்கட்டின் விலை 198 டொலர்களாகவும், பெரிய ஜக்கட்டின் விலை 350 டொலர்களாகவும் காணப்படுகின்றது.

எனினும் இவற்றிற்கு இடையில் ஆண்கள், பெண்கள் என அனைவருக்குமான அளவில் இந்த நவீன ஜக்கெட்டுக்கள் கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers